ஈசனின் நடனம்தான் அணுவியல் துகள்களின் நடனம்
அவனின்றி ஓர் அணுவும் அசையாது எனத் திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடினார். இதற்குக் காரணம் அவர் அணுவின் அசைவை சிவனாகப் பார்த்தார். நாம் காலங் காலமாக வணங்கி வரும் நடராஜர் சிலையில் அணுவியல் துகள்கள் நகரும் அமைப்பின் சூட்சமம் அடங்கியுள்ளது.
ஓர் அணு என்பது புரோட்டொன், நியூட்ரோன் மற்றும் எலெக்ட்ரோன்களால் ஆனவை. புரோட்டோனும் நியூட் ரோனும் ஒன்றோடு ஒன்றாய் பிணைந்திருப்பதை நியூக்லியஸ் என்றழைப்பர். இந்த நியூக்லியஸை சுற்றி வரும் எலெக்ட் ரோன் சுழன்று ஒரு சுற்றுப்பாதையை உருவாக்குகிறது. இதுவே அணுநகர்வு. இந்த அணு நகர்வுதான் நடராஜர் சிலையின் வடிவம்.
இந்த அணுக்களை இயக்கும் ஒரு உப அணு கண்டிப்பாக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதினர். இதற்குக் காரணம் பெரு வெடிப்பு. அதாவது ‘Big-Bang’ தத்துவத்தின் படி பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த அண்டம் என்பது ஒரு தீப்பிழம்பாக இருந்தது. இந்த தீப்பிழம்பானது விரியத் தொடங்கவே வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டமாகவும் கோள்களாகவும் உருவாகின. இந்த அண்டம் இன்னும் விரிந்துக் கொண்டேதான் போகின்றது.
இந்த அணுக்களையும் அணுக்கூட்டங்களையும் ஒன்றோடு ஒன்றாக கட்டிப் போடும் புவியீர்ப்பு சக்தியைக் கழித்தால் நிறை ஒன்று கிடைக்கும். அதுதான் ஆங்கிலத்தில் ‘ Mass’. இந்த நிறை என்பது விஞ்ஞானிகளுக்கு பல காலமாக புரியாத புதிர்!
இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ் இந்த ஆராய்சி தொடர்பாக 1924ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஆராய்ச்சி கட்டுரை அனுப்பினார். இவர்களின் ஆராய்சியை அடிப்படையாக கொண்டே இந்த கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆராய்சி தொடங்கப்பட்டது. இதற்கு ஆங்கிலத்தில் ‘ HIGGS BOSON’.
இதைத்தான் திருமூலர் முன்னமே ‘ஈசன்’ என்றார். இந்த ஈசனின் உருவம்தான் கடவுள் அணுவின் உருவம்!
“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”
கருத்த பரந்த சடையின் நடுவே பொன்னிறத்தில் ஒரு உருவமில்லா ஒளியைக் கற்பனை செய்துப் பாருங்கள் அதுவே ‘ HIGGS BOSON அதுவே உருவமுள்ள நடராஜர் சிலை, ஒளியின் வடிவாய் கடவுள் அணு ‘ HIGGS BOSON.
இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பரிமாணம் என பிரபஞ்ச ரகசியத்தைக் கூறும் வல்லமை உள்ளதாலே இதை கடவுள் அணு என்கிறார்கள். இந்தக் கடவுள் அணுவை முழுமையாகக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் நெருங்கிவிட்டனர்.
இதன் முயற்சிகள் அனைத்தும் அணுசக்தி தொடர்பான ஐரோப்பிய ஆராய்சி நிலையமான செர்னில் (CERN) நடந்தது. இந்த அணுநகர்வுக்கும் நடராஜர் சிலைக்கும் உள்ள தொடர்பினை அறியவே இந்த ஆய்வுக் கூடத்தின் வாசலில் இந்தியா வழங்கிய 6 அடி உயர சிதம்பர நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடவுள் அணுவின் எவ்வளவு பெரியது தெரியுமா? அணு என்பதே நம் கண்களுக்கு புலப்படாத ஒன்று. இந்தக் கடவுள் அணுவை வர்ணிக்கிறார் திருமூலர் இவ்வாறு,
“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே”
பசுவின் முடியில் ஒன்றை எடுத்து, அதை நூறாக கூறிட்டு, பின் அதில் ஒன்றை ஆயிரமாக கூறிட்டு, அதை நான்காயிரமாக பிரித்தால் அதுவே இந்த கடவுள் அணுவின் வடிவம்!
இந்த பிரபஞ்ச ரகசியத்தைக் கூறும் இந்த கடவுள் அணுவிற்கு இந்து சமய தத்துவ அடிப்படையில் நடராஜர் சிலையில் காணப்படும் உவமை என்ன?
இந்த அணுநுகர்வை பற்றியும் நடராஜர் சிலையைப் பற்றியும் எழுதிய முதன் முதலாக ப்ரிட்ஜாப் காப்ரா ‘The Tao of Physics’ எனும் நூலில் எழுதினார்.
‘ ஒவ்வொரு அணுநகர்வும் ஒரு ஆற்றல்மிக்க நடனத்தை வழங்குவது மட்டுமில்லாமல் அதுவே ஒரு ஆற்றல்மிக்க நடன உருவாக உள்ளது. இது ஆக்கல் மற்றும் அழித்தல் காரியத்தை திரும்பத்
திரும்பத் செய்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுவே இந்து சமய அடிப்படையில் இந்து சமயம் வணங்கும் சிவனின் நடனம். பிரபஞச்சத்தை உவாக்குபவனும் அழிப்பவனும் அவனே! இது
முடிவில்லாத் தொடர்.’ என்கிறார்.
சிவனின் வலது கையில் இருக்கும்உடுக்கை ஓம் என்ற மந்திரத்தைத் ஒலிக்கும். இதுவே பிரபஞ்ச ஒலி எனக் கூறப்படுகிறது. இடது கையில் இருக்கும் தீ அழிவு மற்றும் ஒரு வடிவத்தைகலைத்து புதிய உலகம் உலகம் உருவெடுக்க வழிவகுக்கும். கீழிறுக்கும் வலது கை அபய முத்திரை. பயம், தீயசக்திகளிலுருந்து விடுதலை கொடுக்கிறது. இடது காலை சுட்டிக் காட்டும் வலது கை இரட்சிப்பையும் ஞானத்தையும் குறிக்கிறது.
சிவனின் காலில் இருக்கும் அபஸ்மாரா என்பவன் அழிக்கமுடியாதவன் ஆனால் சமாளிக்க முடிந்தவன். இது அறியாமையை சிவன் ஆட்கொள்வதையும் சுற்றியுள்ள தீப்பிழம்பு பிரபஞ்சத்தையும்
குறிக்கிறது. சிவனின் இடுப்பில் இருக்கும் பாம்பு அனைவரிடத்திலும் தெய்வீக சக்தி அதாவது குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. பரந்து கிடக்கும் சடையானின் தலையில் இருக்கும் கங்கை நதி ஆகாயத்திலிருந்து பூமிக்கு வரவே உலகம் அழியும் என்றும் குறிக்கப்படுகிறது.
574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்றில் பெரு வெடிப்பு போன்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கண்டுபிடிக்க முயற்சிக்கும் இந்த அணு ரகசியத்தை,
“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”
எனத் திருமூலர் பாடினார். ஆனால் இந்து சமயத்திற்கும் அறிவியல் கோட்பாடுகளுக்கும் இடையே பிணைக்கப்பட்டுள்ள ரகசியங்கள் வெறும் ரகசியமாய் இல்லாமல் வெளிச்சத்திற்கு வந்தால்
மட்டுமே பல அர்த்தங்கள் புரியும், அறியாமை நீங்கும்!
கருத்துகள்
கருத்துரையிடுக