முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலங்களை கடந்து நிலைக்கும் கல்லணை

தமிழன் சாதித்த கட்டிடகலை


தமிழன் சாதித்த கட்டிடகலை - கல்லனை

கல்லணை வரலாறு:

கல்லனையைக் கட்டியது முதலாம் கரிகாலனின் பேரனான இரண்டாம் கரிகாலன் கல்லனையைக் கட்டியவர்.


உலகில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் மிகப் பழமையானதும், பல நூற்றாண்டுகளுக்கு (2000 ஆண்டுக்கு மேல் பழமையானது) மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருவது கல்லனை.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் சங்ககாலத்தில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

சங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழினுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.


கி.பி. 1777ம் ஆண்டு மெக்கன்சி ஆவணக்குறிப்புகளில் அனைக்கட்டி என கல்லனை குறிப்பிடப்பட்டுள்ளது. பேயர்டு சுமித்(Baird Smith) என்ற ஆங்கில பொறியியல் வல்லுனர் 1853ம் ஆண்டில் எழுதிய “தென்னிந்தியாவின் பாசனம்” என்ற நூலில் கல்லனையை ஒரு மிகச் சிறந்த பொறியியல் சாதனை எனக் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் இந்த அணை எப்படி சாத்தியம்?  என்ற கேள்வி அவர்களிடம் இருந்து கொண்டே இருந்தது. ஒரு சமயம் மணற்போக்கிகள் அமைக்க கல்லணையை ஒட்டி 12 அடி ஆழம் தோண்டிய போதுதான் இதற்கான விடை அவருக்குக் கிடைத்தது. மிகப்பெரும் பாறைகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு கல்லணை கட்டப்பட்டிருந்தது. பாறைகளுக்கிடையே களிமண் பூச்சுகள் மட்டுமே இருந்தது.

தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவன் வாக்கு

வள்ளுவரை பற்றி அறியாத செய்திகள் திருவள்ளுவர் காலம்: அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கி...

ராஜனுக்கே ராஜன் ராஜராஜசோழன்

தலை வணங்கா தமிழன் வீறு கொண்டுவிட்டேன் ! இனி வீழ்ச்சி எமக்கில்லை ! தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று ஆராயத்தக்கது. சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது மிக பழமையானது சோழ ராஜ்யம். இதனை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகா கல்வெட்டிலும் கூட காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சோழர்கள் காலத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்  1 சங்க கால சோழர்கள்  2 விஜயால சோழர்கள்  ...

விஞ்ஞானிகளை மிஞ்சும் மெய்ஞானம்

ஈசனின்  நடனம்தான் அணுவியல் துகள்களின் நட னம் அவனின்றி ஓர் அணுவும் அசையாது எனத் திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடினார். இதற்குக் காரணம் அவர் அணுவின் அசைவை சிவனாகப் பார்த்தார். நாம் காலங் காலமாக வணங்கி வரும் நடராஜர் சிலையில் அணுவியல் துகள்கள் நகரும் அமைப்பின் சூட்சமம் அடங்கியுள்ளது. ஓர் அணு என்பது புரோட்டொன், நியூட்ரோன் மற்றும் எலெக்ட்ரோன்களால் ஆனவை. புரோட்டோனும் நியூட் ரோனும் ஒன்றோடு ஒன்றாய் பிணைந்திருப்பதை நியூக்லியஸ் என்றழைப்பர். இந்த நியூக்லியஸை சுற்றி வரும் எலெக்ட் ரோன் சுழன்று ஒரு சுற்றுப்பாதையை உருவாக்குகிறது. இதுவே அணுநகர்வு. இந்த அணு நகர்வுதான் நடராஜர் சிலையின் வடிவம். இந்த அணுக்களை இயக்கும் ஒரு உப அணு கண்டிப்பாக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதினர். இதற்குக் காரணம் பெரு வெடிப்பு. அதாவது ‘Big-Bang’ தத்துவத்தின் படி பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த அண்டம் என்பது ஒரு தீப்பிழம்பாக இருந்தது. இந்த தீப்பிழம்பானது விரியத் தொடங்கவே வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டமாகவும் கோள்களாகவும் உருவாகின. இந்த அண்டம் இன்னும் விரிந்துக் கொண்ட...