ஈசனின் நடனம்தான் அணுவியல் துகள்களின் நட னம் அவனின்றி ஓர் அணுவும் அசையாது எனத் திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடினார். இதற்குக் காரணம் அவர் அணுவின் அசைவை சிவனாகப் பார்த்தார். நாம் காலங் காலமாக வணங்கி வரும் நடராஜர் சிலையில் அணுவியல் துகள்கள் நகரும் அமைப்பின் சூட்சமம் அடங்கியுள்ளது. ஓர் அணு என்பது புரோட்டொன், நியூட்ரோன் மற்றும் எலெக்ட்ரோன்களால் ஆனவை. புரோட்டோனும் நியூட் ரோனும் ஒன்றோடு ஒன்றாய் பிணைந்திருப்பதை நியூக்லியஸ் என்றழைப்பர். இந்த நியூக்லியஸை சுற்றி வரும் எலெக்ட் ரோன் சுழன்று ஒரு சுற்றுப்பாதையை உருவாக்குகிறது. இதுவே அணுநகர்வு. இந்த அணு நகர்வுதான் நடராஜர் சிலையின் வடிவம். இந்த அணுக்களை இயக்கும் ஒரு உப அணு கண்டிப்பாக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதினர். இதற்குக் காரணம் பெரு வெடிப்பு. அதாவது ‘Big-Bang’ தத்துவத்தின் படி பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த அண்டம் என்பது ஒரு தீப்பிழம்பாக இருந்தது. இந்த தீப்பிழம்பானது விரியத் தொடங்கவே வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டமாகவும் கோள்களாகவும் உருவாகின. இந்த அண்டம் இன்னும் விரிந்துக் கொண்ட...